Saturday, August 18, 2018

WELCOME

கல்வி


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
.


ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.
                                                                                           -சாக்ரடீஸ்.

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். 
                                                                               -விக்டர் ஹியூகோ. 


கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. 
                                                                                     -அரிஸ்டாட்டில்


நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்!    
                                                                                -சார்ல்ஸ் கால்டன்.

என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்?
                                                                              -ருட்யார்ட் கிப்ளிங்.